பாக். சூஃபி தலத்திற்கு அருகில் குண்டு தாக்குதல்

8 பேர் பலி

பாகிஸ்தானில் லாகூரில் உள்ள புகழ்பெற்ற சூஃபி முஸ்லிம் புனிதத்தலம் ஒன்றுக்கு வெளியே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் குறைந்தது 8 பேர் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இருப்பதாக கூறப்படுகிறது. பொலிஸ் வேன் ஒன்றே பிரதான இலக்காக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெற்காசியாவின் மிகப் பழைமையான சூஃபி புனிதத் தலமான டாடா டர்பார் சூஃபி தலத்திற்கு அருகிலேயே இந்த குண்டு வெடித்துள்ளது. இதுவரை எந்தக் குழுவும் இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

பாகிஸ்தான் முஸ்லிம்கள் இஸ்லாமிய புனித மாதமான ரமழானை ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.

குறித்த பகுதியில் பாதுகாப்பு சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதோடு குண்டு வெடித்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த புனிதத் தலத்திற்கு ஒவ்வொரு வருடமும் சுன்னி, ஷியா பிரிவைச் சேர்ந்த பலர் வருகை தருகின்றனர். இந்த புனித் தலத்தில் 2010ஆம் நடைபெற்ற இரண்டு தற்கொலை குண்டு தாக்குதலில் டஜன் கணக்கானோர் உயிரிழந்தனர்.

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை