பாடசாலை நடவடிக்கைகள் வழமைக்கு திரும்புகின்றன

பாடசாலைகளின் நடவடிக்கைகள் தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்பி வருவதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலை ஆரம்பமாகி கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில், பாடசாலைகளுக்கு இன்றைய தினம் (09) மாணவர்களின் வரவு அதிகரித்துள்ளதாகவும், கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

பாடசாலைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இராணுவத்தினரின் உதவியுடன் விசேட வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, எந்தவித அச்சமுமின்றி பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடசாலைகளில் பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பாடசாலை விழிப்புணர்வுக் குழுக்கள், பாடசாலை முகாமைத்துவ உறுப்பினர்கள் ஆகியோர் பாடசாலைகளின் பாதுகாப்புத் தொடர்பில் உறுதியளித்துள்ளனர். ஆகையால், பெற்றோர் தமது பிள்ளைகளை எந்தவித அச்சமுமின்றி பாடசாலைகளுக்கு அனுப்ப முடியும் எனவும், கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகை தினமும் அதிகரித்து வருவதோடு, எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளில் மாணவர்களினதும்; ஆசிரியர்களினதும் வரவு 100வீதமாக காணப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும், கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

Thu, 05/09/2019 - 11:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை