அவசியம் ஏற்படின் சந்தேகநபர்களை தனியாக முன்னிலைப்படுத்த சட்ட திருத்தம்

விளக்கமறியலை நீடிப்பது தொடர்பில், சந்தேகநபர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை, தேவையான சந்தர்ப்பத்தில் மாத்திரம் தனிப்பட்ட ரீதியில் ஆஜர்படுத்துவது தொடர்பாக தேவையான வகையில் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இது தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள முன்வைத்த தீர்மானத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சட்ட ரீதியான அவசியத்தின் அடிப்படையில், கைதிகளை விளக்கமறியலில் வைப்பதற்கான உத்தரவை நீடிப்பதற்காக, 2 வாரங்களுக்கு ஒருமுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கும் போது, அக்கைதிகள் சிறைச்சாலை அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் அவதானத்திற்குட்படுவதால், 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்ற வழக்கு விதிகள் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதன் மூலம் சட்டரீதியான அவசியத்தில் தளர்வை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் இதற்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, விசேட சந்தர்ப்பங்களின் கீழ் சந்தேக நபர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை தனிப்பட்ட ரீதியில் நீதிமன்றத்திற்கு வருகை தருவதற்கான அவசியத்திலிருந்து விடுவிப்பதற்கான திருத்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலா அத்துக்கோரள முன்வைத்த தீர்மானத்திற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Wed, 05/08/2019 - 14:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை