உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஒரு மாதம்; விசேட ஆராதனை

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு, இன்றைய  தினத்துடன் (21) ஒரு மாதம் பூர்த்தியாகியுள்ளது. இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை விசேட ஆராதனை இடம்பெற்றது.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றின் மீதும் கொழும்பிலுள்ள 3 பிரதான ஹோட்டல்கள் மீதும் மற்றும் தெஹிவளை விடுதியொன்றின் மீதும் தெமட்டகொடை மஹவில கார்டனிலும் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.  

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் அகப்பட்டு சுமார் 250 பேர் உயிரிழந்ததோடு, 450 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்திருந்தனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து நாடு பூராகவும் தொடர்ச்சியான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, இதுவரையில் 89 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 69 பேர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைப்பட்டுள்ளதோடு, ஏனைய 20 பேரும் தீவிரவாத விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Tue, 05/21/2019 - 13:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை