குட்டி இளவரசருக்கு பெயர் சூட்டினர் ஹரி -மேகன் தம்பதியினர்

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அவரது பாரியார் மேகன் மார்க்கில் ஆகியோர் தமது குழந்தைக்கு ஆர்க்கி ஹரிஸன் மவுண்ட்பட்டர்ன் வின்ஸ்டர் (Archie Harrison Mountbatten-Windsor)  என பெயர் சூட்டியுள்ளனர்.

இளவரசர் ஹரி –மேகன் மார்க்கில் தம்பதியினருக்கு கடந்த 06 ஆம் திகதி ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது. 3.2 கிலோகிராம் நிறையுடைய இக்குழந்தை, பிரித்தானிய முடிக்குரிய அரியணையின் 7 ஆவது வாரிசாகும்.

கடந்த 2018 ஆம் ஆண் ஆண்டு மே 19 ஆம் திகதி, வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் சப்பல் தேவலாயத்தில் இளவரசர் ஹரியும் அமெரிக்க நடிகையான மேகன் மார்க்கிலும் திருமண பந்தத்தில் இணைந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 05/09/2019 - 08:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை