வயிற்றில் போதைப் பொருள் கடத்த முயன்றவர் மரணம்

ஜப்பானைச் சேர்ந்த 42 வயது ஆடவர் போதைப்பொருள் பொட்டலங்களைக் கடத்தும் முயற்சி கைகூடாமல் உயிரிழந்துள்ளார்.

பொட்டலங்களை விழுங்கிவிட்டு கொலம்பியாவிலிருந்து டோக்கியோ புறப்பட்ட அவர் நடுவழியில் உயிரிழந்தார். ஜப்பானுக்கு செல்லும் வழியில் அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால், விமானம் அவசரமாக தரையிறங்கியது. ஆனால் ஆடவர் விமானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனையில் ஆடவரின் வயிற்றுக்குள் இருந்த 246 போதைப்பொருள் பொட்டலங்கள் கண்டுடிக்கப்பட்டன.

இந்தப் பைகள் ஒவ்வொன்று 2.5 சென்டிமீற்றர் நீளம் மற்றும் 1 சென்டி மீற்றர் அகலம் கொண்டவையாகும்.

இரத்தத்தில் அளவுக்கதிகமான போதைப் பொருள் சேர்ந்ததால், மூளை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. பயணிகள் விமானங்களில் சிறு பைகளில் போதைப் பொருளை நிரப்பி அவைகளை விழுங்கி கடத்திச் செல்வது பொதுவான வழக்கமாக உள்ளது. எனினும் உடலுக்குள் கொக்கைன் பை உடைந்து கடத்தல்காரர்கள் உயிரிழந்த சம்பவங்கள் இதற்கு முன்னரும் பதிவாகியுள்ளன.

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை