வட மேல் மாகாண ஊரடங்கு தற்காலிக நீக்கம்

RSM
வட மேல் மாகாண ஊரடங்கு தற்காலிக நீக்கம்-Curfew Lifted From 4pm to NW Province-Impose From 6pm

மீண்டும் மாலை 6.00 மணிக்கு அமுல்

வட மேல் மாகணத்தில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று (14) பிற்பகல் 4.00 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் அன்றாட செயற்பாடுகள் கருதி குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதேவேளை, மீண்டும் வட மேல் மாகாணத்தில் இன்று (14) மாலை 6.00 மணி முதல் நாளை (15) முற்பகல் 6.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

நேற்றைய தினம் (13) குருணாகல் மாவட்டத்தின் குளியாபிட்டி, ஹெட்டிப்பொல, பிங்கிரிய, தும்மலசூரிய பிரதேசங்களில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து, நேற்று பிற்பகல், மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணத்தில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

Tue, 05/14/2019 - 15:38


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக