கண்காணிப்பு குழுவின் அறிக்கை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிப்பு

சர்ச்சைக்குரிய 'பெற்றி கெம்பஸ்'

பெற்றி கெப்பசுக்கு வெள்ளிக்கிழமை விஜயம் செய்த பாராளுமன்ற கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய பல்கலைக்கழகம் தொடர்பான அறிக்கையினை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசூமாரசிங்க தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் மட்டக்களப்பு புணானை பெற்றி கெம்பஸ் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

பாராளுமன்ற உப குழுவின் தலைவர் பேராசிரியர் ஆசூமாரசிங்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கடந்த வெள்ளிக்கிழமையன்று அங்கு சென்று கண்காணித்ததுடன் ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.இக் குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான

எஸ்.வியாழேந்திரன் மற்றும் திருமதி ரோஹினி விஜயரட்ன ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இவ் விடயம் அறிந்து அங்கு வருகை தந்த திம்புலாகல ராகுல லங்கார தேரரின் தலையீட்டினால் ஊடகவியலாளர்கள் அங்கு பிரவேசிக்கக் வாய்ப்பு கிட்டியது.

அங்கு தொடர்ந்து பேசிய ஆசூமாரசிங்க எம்.பி, பல்வேறு அரசாங்க நிறுவனங்களை அழைத்து கலந்துரையாடவுள்ளோம்.இந்த மாத இறுதிக்குள் கண்காணிப்புக் குழு அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் 6 வாரங்களின் பின்னர் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படும்.இதுவே நடைமுறையாகும்.2015 யூலை மாதம் அப்போது பிரதி அமைச்சராக இருந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இவ் நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் உயர் கல்வி அமைச்சுக்கு வேண்டுகோன் ஒன்றை முன்வைத்துள்ளார்.

கல்வி நிறுவனம் என்ற ரீதியில் அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக அரசாங்கமும் இணைந்து செயற்பட வேண்டும் என நான் தனி நபர் பிரேரணையை முன்வைத்தேன் என ஊடகவியாளர்களிடம் கண்காணிப்பு குழுவின் தலைவர் ஆசூமாரசிங்க கருத்து தெரிவித்தார்.

பாசிக்குடா நிருபர்

 

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை