சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

ஏனைய பிரதேசங்களின்பல இடங்களில் பிற்பகல்2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்தோடு மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின்சில இடங்களில் 100 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Fri, 05/24/2019 - 08:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை