பெற்றி பல்கலைக்கழகத்தை அரசு முழுமையாக சுவீகரிக்க வேண்டும்

எதிர்க்கட்சியினரின் பிள்ளைகள் நாளை பாடசாலைக்கு செல்வர்

பெற்றி'பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை மாத்திரமல்ல இப் பல்கலைக்கழத்தையே அரசாங்கம் சுவீகரிக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகளை அவர்களே பாடசாலைகளுக்கு நாளை சென்று விடுவததென தீர்மானித்துள்ளோம். அரசாங்கத்தை பாதுகாப்பதற்காகவல்ல நாட்டின் எதிர்காலத்தை சிந்தித்தே இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்

வெசாக் தினத்தை

முன்னிட்டு நேற்றுமுன்தினம் களனி ரஜமஹா விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.

அச்சம், பீதியின் காரணமாக எவரும் வெசாக் நிகழ்வுகளில், கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டாம். தேசிய பாதுகாப்பானது அரசாங்கத்தினதும், முப்படையினரினதும் பொறுப்பாகும். பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

நாளைய தினம் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் அனைவரையும் பாடசாலைக்கு அனுப்ப தீர்மானித்துள்ளோம். பிள்ளைகளை பாராளுமன்ற உறுப்பினர்களே பாடசாலைகளுக்கு கொண்டுசென்று விடவுள்ளனர். அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கம் எமக்கு இல்லை. ஆனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

இதேவேளை ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர்,

ஷரிஆ பல்கலைக்கழகம் தொடர்பில் கடுமையான எதிர்ப்புகள் கிழம்பியுள்ளன. அரசாங்கம் இது குறித்து உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும். அதனை நிர்வகிப்பதல்ல பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் சுவீகரித்துக்கொள்ள வேண்டுமென்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை