இரண்டு தினங்களுக்கு மட்டுமே வெசாக்

தேசிய வைபவம் காலியில் 

அரச வெசாக் நோன்மதி தின வைபவம் இம்முறை இரண்டு தினங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளதுடன், தேசிய வெசாக் தினம்  காலி நெல்வத்த தொட்டகமுவ ரன்பன் ரஜமகா விகாரையில் நடத்துவதற்கு   தீர்மானித்துள்ளதாக பௌத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.  

பௌத்த சாசன அமைச்சில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  

அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது,  பௌத்த ஆலோசனை சபையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பிரகாரம் தேசிய வெசாக் தினத்தை இரண்டு தினங்களுக்கு மாத்திரம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

இம்முறை அரச வெசாக் வைபவம் காலி நெல்வத்த தொட்டகமுவ ரன்பன் ரஜமகா விகாரையில் நடத்தப்படவுள்ளது. கொள்கை வழிபாடுக்கு முக்கியத்துவம் வழங்கி அரச வெசாக் வைபவம் கொண்டாடப்படவுள்ளது.  

எந்தவொரு கண்காட்சி கூடங்களும் இதில் இடம்பெறாது. வெசாக் தினத்தை கொண்டாடுவதில் பொதுமக்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.  

(சுப்பிரமணியம் நிஷாந்தன்)

 

Thu, 05/09/2019 - 07:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை