பிரதி சபாநாயகர் தலைமையில் தெரிவுக்குழு

லோரன்ஸ் செல்வநாயகம்

உயிர்த்த ஞாயிறன்று நாட்டில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கவென பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில்அறிவித்தார்.  பாராளுமன்றம் நேற்றுக்காலை 10.30 மணிக்கு கூடிய போது சபாநாயகரின் அறிவிப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜெயசூரிய இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது .இதற்கிணங்க பிரதி சபாநாயகர் ஆனந்த குமார சிறி தலைமையிலான ஏழு உறுப்பினர்களை உள்ளடக்கிய பாராளுமன்றத் தெரிவு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தெரிவுக்குழுவில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா, ஆசு மாரசிங்க, காவிந்த ஜயவர்தன, ஜயம்பதி விக்ரமரட்ன, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உள்ளடங்குவதாகவும்ம் சபாநாயகர் தெரிவித்தார்.

Fri, 05/24/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை