ஈரானுடன் அமெரிக்கா போரை விரும்பவில்லை

மைக் பாம்பியோ

ஈரான்–அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஈரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், ஈரான் ஒரு “சாதாரண நாடாக” நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், அமெரிக்காவுடன் எந்தப் போரும் இருக்காது என ஈரானின் அதி உயர் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

வளைகுடா பகுதியில் கடந்த வாரம் போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை அமெரிக்கா நிலை நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த ஞாயிறன்று ஐக்கிய அரபு இராச்சிய கடற்கரைக்கு அப்பால் நான்கு எண்ணெய் கப்பல்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக இருந்தது.

இது ஈரான் அல்லது அதற்கு ஆதரவாக குழுக்களின் செயல் என அமெரிக்க புலன்விசாரணையாளர்கள் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

எனினும் இதில் தமக்கு பங்கில்லை என மறுத்திருக்கும் ஈரான் விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை