ரொஹிங்கியரை கொன்ற இராணுவத்தினர் விடுதலை

மியன்மார் அரசாங்கம், 2017ஆம் ஆண்டு ரக்கைனில் 10 ரொஹிங்கிய முஸ்லிம்களைக் கொன்றதற்காகச் சிறையிலடைக்கப்பட்ட இராணுவத்தினர் 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்தது தெரியவந்துள்ளது.

சிறை அதிகாரிகள் இருவர் உள்ளிட்ட சில தரப்புகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

இராணுவத்தினர் 7 பேருக்கும் பத்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டு கூட நிறைவுறாத நிலையில் அவர்கள் கடந்த நவம்பரில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வன்செயலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்த ரோய்ட்டர்ஸ் செய்தியாளர்கள் இருவரும் சிறையில் கழித்த காலத்தைவிடவும் அது குறைவு. தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தினர் சில மாதங்களாகச் சிறையில் இல்லை என்பதை மூத்த சிறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இராணுவம் அவர்களது தண்டனைக் காலத்தைக் குறைத்ததாக அவர்கள் குறிப்பிட்டனர். மேல் விபரம் தர அந்த அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

Tue, 05/28/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை