அமெரிக்கா மீது நடவடிக்கை எடுக்க சீனா கடும் எச்சரிக்கை

சீன இறக்குமதிகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தால், உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று சீனா எச்சரித்துள்ளது. சீனத் துணைப் பிரதமர் லீயு ஹே தலைமையிலான தூதுக் குழு, 2 நாள் பேச்சுக்காக நேற்று வொஷிங்டன் பயணமானது.

இவ்வேளையில், சீன வர்த்தக அதிகாரிகள், வொஷிங்டனில் நடக்கவிருக்கும் அமெரிக்க மற்றும் சீன வர்த்தகப் பேச்சின்போது உடன்பாடு செய்துகொள்ள முனைப்புடன் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளார்.

இருப்பினும், இணக்கம் காணாவிட்டால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் பற்றிய மிரட்டலை இருதரப்பும் தளர்த்திக்கொள்ளவில்லை.

200 பில்லியன் டொலர் மதிப்புமிக்க சீன இறக்குமதிகள் மீதான வரியை உயர்த்துவது தொடர்பில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் தயாராகிவருகிறது.

அது சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் தற்போதைய 10 வீத வரி, நேற்று நள்ளிரவுக்குப் பின் 25 வீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடன்பாடு செய்துகொள்வதோ, கூடுதல் வரி விதிப்பதோ, இரண்டுமே தமக்கு சம்மதம் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறினார்.

Fri, 05/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை