தஞ்சமடைந்தோரை வேறு நாடுகளில் குடியமா்த்த நடவடிக்கை

இலங்கையில் தஞ்சமடைந்திருக்கும் வெளிநாட்டவர்களை சர்வதேச சட்டத்துக்கு அமைய வேறு நாடுகளில் குடியமர்த்துவதற்கு ஐ.நா சபையுடன் இணைந்து அரசாங்கம் செயற்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரட்ன தெரிவித்தார்.

இலங்கையில் வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக பாகிஸ்தானிலிருந்து வந்த 1698 புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களில் 869 பேர் அந்தந்த நாடுகளில் அகதிகள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 40 பேரின் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு அவர்கள் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் நாடுகடத்தப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் புகலிடம் கோரியுள்ள பாகிஸ்தான் அகதிகளை தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. இவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 416 பேர் அமெரிக்காவினால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதுடன், 7 பேர் பிரித்தானியாவினாலும், 160 பேர் கனடாவினாலும், 3 பேர் பிரான்ஸினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். 234 பேர் தமது விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். எஞ்சிய 1000 பேரே உள்ளனர். இவர்களை சர்வதேச சட்டத்துக்கு அமைய கண்காணிக்கப்படுவதுடன், வேறு நாடுகளில் குடியமர்த்துவதற்கு ஐ.நாவுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

Thu, 05/09/2019 - 08:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை