கூகுளில் புதிய தேடல் வசதி

இணையத்தில் பயன்படுத்தக்கூடிய புதிய தேடல் வசதிகளை இம்மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

விளம்பர நிறுவனங்கள் கூகுள் பயனீட்டாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதைக் குறைப்பதற்காக அந்த வசதிகள் அறிமுகம் காண்பதாக அது தெரிவித்தது.

குக்கீளைப் பயன்படுத்தி விளம்பர நிறுவனங்கள் பலரின் இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கின்றன. அதைத் தவிர்க்கும் வகையில் புதிய தேடல் வசதிகள் இருக்கும் என்று கூகுள் தெரிவித்தது.

அத்தோடு, பல புதிய தனியுரிமைக் கட்டுப்பாடுகளையும் அறிமுகப்படுத்தப்போவதாக கூகுள் கடந்த செவ்வாயன்று நடந்த வருடாந்த மாநாட்டில் அறிவித்தது.

இணையப் பயனீட்டாளர்கள் தங்கள் விருப்பத்துக்கும் தேவைக்கும் ஏற்ற விளம்பரங்களை வரவேற்கவே செய்கின்றனர்.

ஆனால், விரும்பியபோது அதை நிறுத்தி வைக்கும் வசதி இருந்தால் மட்டுமே அவர்கள் அதை விரும்புவதாக கூகுள் குறிப்பிட்டது.

Thu, 05/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை