பொலிஸ் மாஅதிபர் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உச்ச நீதிமன்றத்தில அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். பதவியிலிருந்து தம்மை கட்டாய விடுமுறையில் அனுப்பியமையை சவாலுக்கு உட்படுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவே  இம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை அவர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட சி.எம்.விக்கிரமரட்னவின் நியமனத்தை இரத்துச் செய்யுமாறு அவரது முதலாவது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.

குறித்த மனுவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பொலிஸ் மாஅதிபர், அரசியலமைப்பு சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், சட்டமா அதிபர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட பலரை பிரதிவாதிகளாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து கடந்த மாதம் 09ஆம் திகதியே புலனாய்வுத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தும் அது தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுத்திராதமையின் காரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் உத்தரவையடுத்து ஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகியிருந்தார். என்றாலும், பூஜித் ஜயசுந்தர பதவி விலகாதமையால் அவர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார். இதனை ஆட்சேபித்தே அடிப்படை உரிமை மீறல் மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார்.

Thu, 05/30/2019 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை