துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு; இருவர் காயம்

லுணுகம்வெஹர, பெரலிஹெல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

திஸ்ஸமகாராம பகுதியைச் சேர்ந்த 27 வயதான ஒருவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.  

இதேவேளை, இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Fri, 05/17/2019 - 10:08


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக