சூடானில் மூன்று ஆண்டு கால ஆட்சி மாற்றத்திற்கு இணக்கம்

சூடானில் சிவில் நிர்வாகம் ஒன்றுக்கு கையளிக்கும் மூன்று ஆண்டுகால நிலைமாற்றுக் காலத்திற்கு அந்நாட்டின் ஆளும் இராணுவத்திற்கும் எதிர்க்கட்சிக் கூட்டணிக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு இடங்களை எதிர்க்கட்சி கூட்டணி வகிக்கும் என்று ஆளும் நிலைமாற்று இராணுவ கெளன்ஸில் குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் அதிகாரம் பெற்ற இறைமை கெளன்ஸிலின் அங்கத்துவம் பற்றி இரு தரப்புக்கும் இடையில் இன்னும் இணக்கம் ஏற்படவில்லை.

ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கடந்த மாதம் பதவி கவிழ்க்கப்பட்டது தொடக்கம் சூடானில் இராணுவ கெளன்சில் ஆட்சி புரிந்து வருகிறது. எனினும் முழுமையான சிவில் அரசொன்றை ஏற்படுத்துவதற்கு கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நீடித்து வந்தது.

ரொட்டி விலை அதிகரிப்புக்கு எதிராக கடந்த டிசம்பரில் ஏற்பட்ட ஆர்ப்பாட்டம் பின்னர் 30 ஆண்டுகள் ஆட்சி புரியும் ஜனாதிபதி பஷீருக்கு எதராக திரும்பியது.

Thu, 05/16/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை