கனடா, மெக்சிகோவுக்கான அமெரிக்காவின் வரி இரத்து

மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உலோகங்களுக்கான வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரத்து செய்துள்ளார்.

“கனடாவுடனும் மெக்சிகோவுடனும் உடன்பாடு கண்டுள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

வரிகள் ஏதுமில்லாது அமெரிக்கத் தயாரிப்புகளை இந்த நாடுகளில் விற்பனை செய்யப்போகிறோம்” என்றார் ஜனாதிபதி டிரம்ப்.

அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவை வரவேற்ற மெக்சிகோவும் கனடாவும் அமெரிக்காவிலிருந்து வரும் பன்றி இறைச்சி, பாலாடை, பால் ஆகியவற்றுக்கான வரிகளை இரத்து செய்துள்ளன.

இந்நிலையில், ஐரோப்பா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விதிப்பது தொடர்பான முடிவை இன்னும் ஆறு மாதங்களுக்கு டிரம்ப் ஒத்திவைத்துள்ளார். பிற நாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் கார்களால் அமெரிக்க வாகனத்துறை பாதிப்படைந்துள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

ஜனாதிபதி டிரம்ப் எடுத்துள்ள இந்த முடிவுகளால் உலகளாவிய நிலையில் வர்த்தகப் போர் ஏற்படும் சாத்தியம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை