தடைசெய்யப்பட்டிருந்த வெடிபொருட்களுக்கான தடை தளர்த்தப்பட்டது

பயங்கரவாதத் தாக்குதல்களையடுத்து நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக வர்த்தக நோக்கங்களுக்காக வெடிப்பொருட்களை விநியோகிக்கப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரையின் பிரகாரம் தளர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி வெடிபொருட்களை விநியோகிக்கும் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வெடிபொருட்கள் தொடர்பான அளவை மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன், அரச வெடிபொருட்கள் கொள்வனவு செய்யும் நிறுவனத்தின் ஆலோசனையுடன் விநியோகிக்க முடியும்.

அத்தோடு கற்பாறைகளை தகர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கும் மாவட்ட செயலகங்களின் அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை மாவட்ட செயலகங்கள், அரச வெடிபொருள் விநியோக நிறுவனத்துக்கு (CEFAP) 011-2958227 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொள்வதனூடாகவும், பாதுகாப்பு அமைச்சின் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பிரிவின் 011-2335798 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்துவதன் மூலமும் பெற்றுக் கொள்ள முடியுமென இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

Thu, 05/30/2019 - 09:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை