ஐ.நா அகதிகள் நிறுவனத்திற்கு முஸ்லிம் உலக லீக் நன்கொடை

அனைத்து நாடுகளிலும் நீதி மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதில் பொறுப்புவாய்ந்த தலைமை பிரதான தூணாக இருப்பதாக முஸ்லிம் உலக லீக்கின் செயலாளர் நாயகம் கலாநிதி முஹமது பிக் அப்துல் கரீம் அல் இஸ்ஸா வலியுறுத்தியுள்ளார்.

நியூயோர்க்கில் ஐ.நா தலைமையத்தில் இடம்பெற்ற பொறுப்புவாய்ந்த தலைமை தொடர்பான மாநாட்டில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நா அகதிகள் நிறுவனத்திற்கு 1 மில்லியன் டொலர் நன்கொடையை லீக் வழங்கும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.

பெளதீக மற்றும் ஆன்மீன ரீதியில் மனித வாழ்வை மேம்படுத்துவது தொடர்பில் இந்த மாநாட்டில் பேசப்பட்டது. அதிகரிக்கும் பிரிவினைக்கு மத்தியில் உரையாடல்கள் மூலம் நாகரிகத்திற்கு திரும்புவதும் இந்த மாநாட்டில் உரையாடப்பட்ட தலைப்புகளில் ஒன்றாகும்.

அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் ஏழை மற்றும் பணக்காரர்களுக்கு இடையிலான இடைவெளியை தடுப்பது குறித்தும் மாநாட்டில் பங்கேற்றவர்கள் அவதானம் செலுத்தினர்.

Wed, 05/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை