அடிப்படைவாதத்தை முற்றாக ஒழிக்க முஸ்லிம்களின் பங்களிப்பு அவசியம்

பிரிகேடியர் அஸாத் இஸ்ஸதீன்

பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்தது போன்று அடிப்படைவாதம் மீண்டும் தலைதூக்காதிருக்க முஸ்லிம் சமூகம் முழுமையான பங்களிப்பை வழங்க ​வேண்டும் என இராணுவப் படை பிரிகேடியர் அஸாத் இஸ்ஸதீன் கோரினார்.ஏப்ரல் 21 சம்பவத்தினால் முஸ்லிம்கள் மீதான ஏனைய சமூகங்களின் நம்பிக்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இதனை மாற்றி சுமுகமான நிலையை ஏற்படுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டார்.

பாதுகாப்பு கெடு பிடிகளினால்

ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் குறித்து குற்றஞ்சாட்டப்படுவதாக கூறிய அவர் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தைரியமாக முகங் கொடுத்து பழைய நிலைமையை ஏற்படுத்த அர்ப்பணிக்க வேண்டும் எனவும் கோரினார்.

கொழும்பு மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் நிர்வாகிகளை அறிவூட்டும் நிகழ்வு நேற்று தெஹிவளை ஜூம்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தாக்குதல் சம்பவத்தையடுத்து முகங் கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து சிலர் இதன் போது கேள்வி எழுப்பினார்கள்,

பதிலளித்த பிரிகேடியர்,

30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டியுள்ள நிலையில் முஸ்லிம் சமூகத்தில் இருந்து இவ்வாறு பயங்கரவாத தாக்குதல் நடந்திருப்பது பெரும் கவலையளிக்கிறது.250 ற்கும் அதிகமான உயிர்கள் பலியெடுக்கப்பட்டுள்ளது. மன்னர் காலம் முதல் ஆயிரம் வருடங்களுக்கு மேல் நாட்டின் உயர்வுக்காக முஸ்லிம்கள் பங்களித்துள்ள போதும் இந்த தாக்குதலினால் அந்த நற்பெயர் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகம் குறித்த நம்பிக் கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.மீண்டும் இவ்வாறான அடிப்படைவாதிகள் உருவாக கூடாது.இது தான் இறுதி அடிப்படைவாத தாக்குதலாக இருக்க வேண்டும்.

ஷம்ஸ் பாஹிம்

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை