ஓகஸ்ட் முதல் பலாலியிலிருந்து உள்ளூர் விமான சேவை

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்பட்டு எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் அங்கு நிவாரண விலையில் உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிக்க திட்ட மிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.  

இது தொடர்பாக அவர் மேலும் விளக்கமளித்துள்ளதாவது,  பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்படும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதனை துரிதகதியில் நிறைவு செய்வதே அரசாங்கத்தின் இலக்காகவுள்ளது. எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் பலாலி விமான நிலையத்திலிருந்து உள்ளூர் விமான போக்குவரத்தை ஆரம்பிக்கும் வகையிலேயே இதன் மீள்கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.  

முதற்கட்டப் பணிகளின் கீழ் விமான பயண சீட்டுக்கான கட்டணம் வருடம் முழுவதும் நிவாரண முறையில் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் விமான சேவை விரிவாக்கத்திற்காக் முதல் வருடத்திற்கு அரசாங்கத்தின் மானிய அடிப்படையில குறைந்த கட்டணமே இதற்காக அறவிடப்படவுள்ளது.  

இரத்மலான விமான நிலையத்திலிருந்து உள்ளூர் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டவுள்ளதுடன் மத்தள, மட்டக்களப்பு, சீகிரிய, பலாலி ஊடாக கட்டுநாயக்க அல்லது இரத்மலான விமான நிலையம் வரை இந்த உள்ளூர் சேவையின் விரிவாக்கம் காணப்படும். ஓகஸ்ட மாதமளவில் இந்த முயற்சியை வெற்றிக்கொள்வதற்காக திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்றார்.

 

Sat, 05/25/2019 - 09:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை