நாடெங்கும் சகல பாடசாலைகளுக்கும் கடும் பாதுகாப்பு

அரச பாடசாலைகள் இன்று ஆரம்பம்

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்றைய தினம் சகல அரசாங்க பாடசாலைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வியமைச்சின் தீர்மானத்திற்கிணங்க 6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளே இன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தரம் 1 முதல் 5 வரையான

மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்தது.

இதேவேளை, பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசாங்கத்தினால் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் பாடசாலைகளுக்கு அருகில் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாகவும் இன்றும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன என்றும் இதற்கிணங்க இன்று பிற்பகல் வரை பாடசாலைகளுக்கு அருகாமையில் வாகனங்களை நிறுத்தி வைப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். பாடசாலைகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்.

முப்படையினரின் உதவியுடன் பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் வாகனங்களை நிறுத்துவதற்கான தரிப்பிடங்கள் தொடர்பாக திட்டம் வகுப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் குறித்த பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உரிய பிரதிப் பொலிஸ் மா அதிபர்களிடம் கண்காணிப்புப் பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 05/06/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை