அமெரிக்கா பறிமுதல் செய்த கப்பலை கேட்கும் வடகொரியா

அமெரிக்கா பறிமுதல் செய்த தனது வர்த்தகக் கப்பலை உடன் திரும்பத் தரும்படி வலியிருத்தியுள்ள வட கொரியா, அதனை சட்டவிரோதமான கொள்ளை என்று குறிப்பிட்டுள்ளது.

இந்தக் கப்பலை வட கொரிய நிலக்கரி ஏற்றுமதிக்காக பயன்படுத்தி சர்வதேச தடையை மீறி இருப்பதாக அமெரிக்க நீதித் திணைக்களம் கடந்த வாரம் குற்றம்சாட்டியது.

வைஸ் ஹொனஸ்ட் என்ற இந்தக் கப்பல் 2018 ஏப்ரல் மாதம் முதலில் இந்தோனேசியாவில் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கப்பல் பறிமுதல் செய்யப்பட்டது டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் ஜொங் உன் இடையில் 2018 ஆம் ஆண்டு மாநாட்டு உடன்படிக்கைகளின் உணர்வை மீறுவதாகும் என்று வட கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

இதன்மூலம் வட கொரியாவை வலுக்கட்டாயமாக கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்கா நம்பினால், மிகத் தவறான கணிப்பாகும் என்றும் வட கொரியா வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

Wed, 05/15/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை