Header Ads

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யும் சாத்தியம்

மேல், மத்திய, வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களினதும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தினதும் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

இடியுடன் மழை பெய்யும் வேளைகளில் குறித்த பிரதேசங்களில் பலத்த காற்று  வீசக்கூடும். மின்னல் தாக்கங்களிலிருந்து பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. 

Wed, 05/15/2019 - 09:45


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.