ஜனாதிபதி சீனா பயணம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சீனாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

நாகரிகங்கள் தொடர்பான பீஜிங் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்றுக் காலை 7.35 மணியளவில் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்திலிருந்து யூ.எல். 302 இலக்க ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் ஜனாதிபதி சிங்கப்பூருக்குப் பயணமானார்.

அங்கிருந்து சீனா சென்றுள்ள ஜனாதிபதியுடன் தயா கமகே, தலதா அத்துக்கோரள உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 27 முக்கியஸ்தர்கள் சென்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த மாநாடு நாளை ஆரம்பமாகவுள்ளது.

47 ஆசிய நாடுகளைச் சேர்ந்த 2000 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதி

ஷி ஜின்பிங்குக்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து சீனப் பிரதமர் லீ கெஹஜியல்குடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் சீன தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அரசாங்கம் தற்போது மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள், வழமைக்குத் திரும்பியுள்ள நாட்டின் சூழ்நிலை தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்துவார் என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.(ஸ)

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை