ரிஷாத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி நம்பிக்கையில்லா பிரேரணை

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 66 பேர் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் இன்று (16) கையளிக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்‌ஷ ஆதரவான ஒன்றிணைந்த எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள்,  அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர்.

அண்மையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்புள்ளதாக அவர் மீது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை குண்டுத்தாக்குதல்களின் பின்னர் தன் மீது சுமத்தப்படும் குற்றாச்சட்டுக்கள் மற்றும் ஏனைய சம்பவங்கள் தொடர்பில் உண்மை நிலையை கண்டறிந்து அதனை வெளிப்படுத்தும் வகையில்  பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்குமாறு சபாநாயாகர் கரு ஜயசூரியாவிடம் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கடந்த சனிக்கிழமை பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 05/16/2019 - 11:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை