கசகஸ்தானில் வெற்றுப்பதாகை ஏந்தி இருந்த இளைஞன் கைது

கசகஸ்தானில் பொதுச் சதுக்கம் ஒன்றில் எதுவும் எழுதப்படாத பதாகை ஒன்றை பிடித்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அமைதியான ஆர்ப்பாட்டத்திற்கு உள்ள கட்டுப்பாடுகளை வெளிப்படுத்துவதற்காகவே 24 வயது இளைஞர் இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அஸ்லான் சகுட்டினோ என்ற அந்த இளைஞன் தனது சொந்த ஊரான அபய் சதுக்கத்திலேயே வெற்றுப் பதாகையை ஏந்தி நின்றார். தனது செயற்பாடுகள் அனைத்தையும் சகாக்கள் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

“எனது பதாகையில் எதுவும் எழுதப்படாத நிலையிலும் எந்த கோசமும் எழுப்பதாக நிலையிலும் கூட நான் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாத போதும் பொலிஸ் எண்ணை கைது செய்வார்கள் என்பதை காண்பிக்க விருப்பினேன்” என்று அந்த இளைஞன் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.

கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட அவர், விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டதாக தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ உள்ளுர் செய்தி ஊடகங்களில் பரவியதை அடுத்து பலரும் அந்த இளைஞருக்கு ஆதரவாக வெற்றுப் பதாகைகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர்.

எனினும் சட்டத்தின் வரம்புக்குள்ளேயே செயற்பட்டதாக பொலிஸார் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை