பாடசாலைகளில் மாணவர் வரவு மந்தம்

ஹம்பாந்தோட்டையிலுள்ள சகல ஆரம்பபாடசாலைகளும் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நேற்று ஆரம்பிக்கப்பட்டது.   எனினும் சகல பாடசாலைகளிலும் மாணவர் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டதை அவதானிக்கமுடிந்தது.  

அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பெரும்பாலும் சமுகமளித்திருந்தனர்.   நேற்றுமுதல் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக சகல பாடசாலைகளினதும் ஆரம்ப மற்றும் இடைநிலை வகுப்புக்கள் ஒரேதடவையில்   ஆரம்பிக்கப்பட்டாலும் மாணவர் வரவு மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

இருப்பினும் தனியார் வகுப்புக்களில் மாணவர்களின் வரவு ஒரளவு சாதகமாக காணப்பட்டதாக வகுப்பு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.  

பாடசாலைகளுக்கு பொலிஸ் மற்றும் இராணுவபாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினது ஒத்துழைப்புகளுடனும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கபட்டுவருகின்றன. 

பாடசாலைகளை நேற்று ஆரம்பிப்பதற்கு முன்னர் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் முற்றாக சகல ஆரம்ப பாடசாலைகளும் பரிசோதிக்கப்பட்டன. அத்தோடு பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிவரும் வாகனங்களிலும் விசேடபாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.  

பாடசாலைகளுக்கு முன்னால் வாகனங்களை நிறுத்துவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. 

ஹம்பாந்தோட்டைகுறூப் நிருபர் 

Tue, 05/14/2019 - 08:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை