புனித அந்தோனியார் ஆலயத்தை விஸ்தரிக்க காணி

உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலில் சேதமடைந்த கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் விஸ்தரிப்புக்காக துறைமுக அதிகார சபை, 06 பேர்ச் காணியை வழங்கியுள்ளது.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் விசேட வேண்டுகோளின் பேரில் பிரதமர் அலுவலக பிரதானியும் துறைமுகங்கள் கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சருமான சாகல ரத்னாயக்க, துறைமுக அதிகாரசபைக்குச் சொந்தமான 06 பேர்ச்சஸ் காணியை நேற்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளித்தார்.  கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற இந்நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி கர்தினால் பர்னாந்து பிலோனி (Cardinal Fernando Filoni) ஆண்டகை மற்றும் முன்னனி அரசியல்வாதிகள் பலரும் கலந்து கொண்டனர். 

Thu, 05/23/2019 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை