ஹங்கேரியில் படகு கவிழ்ந்து ஏழு தென் கொரியர்கள் பலி

ஹங்கேரி தலைநகர் புடபேஸில் உள்ள டனுப் ஆற்றில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 7 தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்திருப்பதோடு மேலும் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

30 சுற்றுலா பயணிகள், மூன்று சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் இரு ஹங்கேரி நாட்டு படகு ஊழியர்களுடனான அந்தப் படகு நங்குரமிட்டிருந்தபோது மற்றொரு படகு வந்து மோதியுள்ளது.

ஹங்கேரி நாட்டு பாராளுமன்றக் கட்டிடத்திற்கு அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஏழு பேர் மீட்கப்பட்டிருப்பதோடு கடும் மழைக்கு மத்தியில் அந்த ஆற்றில் பாரிய தேடுதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த டனுப் ஆற்றில் மழை காரணமாக வேகமான நீரோட்ட ஏற்பட்டுள்ளது. 45 பேர் செல்லக் கூடிய இரண்டு மாடிகள் கொண்டதாக இந்தப் படகு இருந்துள்ளது. இந்த படகுடன் மோதி மற்றைய படகு பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

டனுப் ஆற்றில் இவ்வாறான சம்பவங்கள் மிக அரிதானது என்று விபத்துக் குறித்து விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 05/31/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை