உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் அமோக விற்பனை:

இரசிகர்கள் ஆர்வம்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுக்கள் இதுவரை இரண்டு இலட்சத்திற்கும் மேல் விற்பனையாகியுள்ளதால் ஐசிசி மகிழ்ச்சியில் உள்ளது.

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் வருகிற வியாழக்கிழமை (30-ம் திகதி) தொடங்கி, ஜூலை 14ம் திகதி வரை நடக்கிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

‘ரவுண்ட் ராபின்’ முறை இந்த உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுவதால், 45 லீக் ஆட்டங்கள் நடைபெறும். அரையிறுதிகள் மற்றும் இறுதிப் போட்டி என 48 ஆட்டங்களாக நடத்தப்படுகின்றன.

இதற்கான டிக்கெட்டை ஐசிசி விற்பனை செய்து வருகிறது. இரசிகர்கள் எளிமையான வகையில் டிக்கெட்டுக்களை வாங்குவதற்கான வழிவகைகளை ஐசிசி செய்து கொடுத்துள்ளது. அதன் விளைவாக இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று ஐசிசி உலகக் கிண்ண தொடருக்கான இயக்குனர் ஸ்டீவ் எல்வோர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரசிகைகள் டிக்கெட்டுக்கள் வாங்கியுள்ளனர். டிக்கெட் வாங்கியவர்களில் ஒரு இலட்சம் பேர் 16 வயதிற்குட்பட்டோர் என தெரிவித்துள்ளார்.

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை