அம்பாறையில் 'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டம்

'நாட்டுக்காக ஒன்றிணைவோம்' என்ற தேசிய அபிவிருத்தி வேலைத் திட்டத் தொடரின் மூன்றாம் கட்டம் அம்பாறை மாவட்டத்தில் மே மாதம் 6ஆம்  திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மக்களின் நலன் கருதி 5000க்கு மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஜனாதிபதி செயலகத்தின் தலைமையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாம் கட்டம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 20பிரதேச செயலக பிரிவுகளைஇலக்காககொண்டு  பொது மக்களுக்கான வேலைத்திட்டங்கள் பல மே மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல். பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் பாரிய மாவட்டமாக கருதப்படும் அம்பாறை மாவட்டம் நாட்டின் மொத்த அரிசி விநியோகத்தில் நான்கில் ஒரு பங்குக்கு பங்களிப்பு செய்வதுடன் ஆறு இலட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வாழ்கின்றனர்.

சிங்களம், தமிழ், முஸ்லிம், பேர்கர் உள்ளிட்ட மக்கள் வாழும் இந்த மாவட்டத்தில் 507கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை இலக்காக கொண்டு நாட்டுக்காக ஒன்றிணைவோம் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் பிரதானமாக 20திட்டங்களும் ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும்தேசிய நீரழிவு நிவாரண வேலைத்திட்டம், பிள்ளைகளை பாதுகாப்போம், போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத் திட்டம், படைவீரர் சேவை, தேசிய உணவு பாதுகாப்பு வேலைத் திட்டம், டெங்குஒழிப்பு, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா, சுற்றாடலை பாதுகாத்தல், கழிவுப் பொருள் முகாமைத்துவம், கிராமசக்தி ஆகிய திட்டங்களை போன்று மரக்கன்றுகளை நடுதல் மனைப் பொருள் வீட்டுத்திட்ட உற்பத்தி ஆரம்ப பாடசாலை, முதியோரை இலக்காக கொண்ட வேலைத்திட்டம் பலவும் இந்த வாரம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் என்று மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது,

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஜனாதிபதி செயலகம் முன்னெடுக்கும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் அமைச்சுக்கள் திணைக்களங்கள் தொழில் சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் இடம்பெறும் பொதுமக்களுக்கான பல்வேறான சேவைகள் இந்த 20மாவட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த வாரத்தில் முழு நாளும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இதற்காக இந்த அரச நிறுவனத்தின் பிரதிநிதிகளை பிரதிநிதித்துவப்படுத்தி திணைக்களத்தின் பிரதான அதிகாரி அடங்கலாக அரச அதிகாரிகள் சிலரும் இதில் கலந்துக் கொள்கின்றனர். அத்தோடு இந்த வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில், எதிர்வரும் மேமாதம் 11ஆம் திகதி உகன பிரதேச செயலாளர் வளாகத்தில் சுமார் 5000க்கும் மேற்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயனாளிகளின் பங்களிப்புடன் இடம்பெறும் என்று அம்பாறை மாவட்டசெயலகம் தெரிவித்துள்ளது.

Mon, 05/06/2019 - 16:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை