சாலியவெவயில் வெசாக் கூடுகளை காட்சிப்படுத்தபொலிஸார் தடை விதிப்பு

கொழும்பு, மருதானை, டீன்ஸ் வீதியில் நேற்று முன்தினமிரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் அன்னதான நிகழ்வை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்தபோது பிடிக்கப்பட்ட படம். மாநகரசபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ இதனை ஏற்பாடு செய்திருந்தார்.அமைச்சர்களான பாடலி சம்பிக்க ரனவக்க, அர்ஜுன ரணதுங்கவும் இதில் கலந்துகொண்டனர். (படம்.ஹிரந்த குணதிலக்க)

 

புத்தளம் சாலியவெவ பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய நூற்றுக்கணக்கான வெசாக் கூடுகளை சாலியவெவ நகரில் காட்சிப்படுத்துவதை சாலியவெவ பொலிஸார் தடை செய்துள்ளனர்.

இதையடுத்து அந்த வெசாக் கூடுகளுள் ஒரு தொகுதி நேற்று முன்தினம் சனிக்கிழமை பகல் தீயிட்டு எரிக்கப்பட்டதுடன் மீதி கூடுகள் வீடுகளுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டது.

சாலியவெவ நகரில் பௌத்த மற்றும் கத்தோலிக்க இளைஞர்கள் இணைந்து கடந்த ஒரு வாரகாலமாக இந்த வெசாக் கூடுகளை உருவாக்கியிருந்ததோடு அவற்றில் ஒரு பக்கத்தில் பௌத்த தர்ம சக்கரமும் மறு பக்கத்தில் சிலுவை குறியீடும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் எழுந்த எதிர்ப்பினையடுத்து புத்தளம் பிரிவின் உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பிரதேசத்தின் அமைதியைப் பாதுகாக்கும் நோக்கில் சாலியவெவ பொலிஸார் நேற்று முன்தினம் குறித்த வெசாக் கூடுகளைக் காட்சிப்படுத்துவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். இவ்வாறு இந்த வெசாக் கூடுகளைக் காட்சிப்படுத்துவது தடுக்கப்பட்டதையடுத்து அவற்றை உருவாக்கிய இளைஞர்களுக்கு மத்தியில் நேற்று முன்தினம் மாலை அமைதியின்மையும் ஏற்பட்டது.

புத்தளம் விஷேட நிருபர்

Mon, 05/20/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை