இந்தியாவிடம் பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு இலகு வெற்றி

உலகக் கிண்ண போட்டியையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது.

அந்த அணியின் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் மிகச் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

ஆரம்ப வீரர்களாக களம் கண்ட ரோஹித் சர்மா, ஷிகார் தவண் ஆகியோர் சோபிக்க தவறினர். போல்ட் பந்துவீச்சில் 2 ஓட்டங்களை மட்டுமே எடுத்து இருவரும் அரங்கு திரும்பினர்.

அடுத்து வந்த அணித்தலைவர் கோலியும் 18 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, லோகேஷ் ராகுல் 6 ஓட்டங்களிலும், சகலதுறை வீரர் ஹார்திக் பாண்டியா 30 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

அதிகபட்சமாக ஜடேஜா 54 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 39.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியா 179 ஓட்டங்களை சேர்த்தது.

180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூஸிலாந்து, 37.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டியது. அணித்தலைவர் கேன் வில்லியம்சன் 67 ஓட்டங்களும், ரொஸ் டெய்லர் 71 ஓட்டங்்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டு ஆட்டமிழந்தனர். பும்ரா, குல்தீப், ஜடேஜா, சாஹல் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை