அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான விண்ணப்பங்கள்

SUG

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதல்களின் பின்னர், தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக அதிகளவான விண்ணப்பங்கள் கிடைப்பதாகவும், இதற்காக பத்திரமுல்லையிலுள்ள  ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் மேலதிக பணியாளர்களை நியமித்துள்ளதாகவும், ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே ஆட்பதிவுத் திணைக்களம் இவ்வாறு கூறியுள்ளது.

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளும் ஒருநாள் சேவை போன்று, வழமையான சேவைக்கும் அதிகளவான விண்ணப்பங்கள் கிடைத்து வருவதாகவும், இந்நிலையில் நாளொன்றுக்கு சுமார் 2,000 விண்ணப்பங்கள் கிடைத்து வருவதாகவும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்தது.

மேலும், அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக ஒரு நாள் சேவை தினமும் காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படுவதோடு, விண்ணப்பதாரர்களுக்கு ஒழுங்குமுறை எண்களை வழங்குவது நண்பகலுடன் முடிவடைவதாகவும், ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்தது.

Fri, 05/17/2019 - 09:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை