கொழும்பில் பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களை நிறுத்த பிரத்தியேக தரிப்பிடங்கள்

மாணவர்களை பாடசாலைகளுக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கென தனியான தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

இது தொடர்பில் அறிவித்துள்ள பொலிஸ் தலைமையகம் தரிப்பிடங்கள் பற்றிய விபரங்களையும் வெளி யிட்டுள்ளதுடன்,  

மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு ஒதுக்கப்பட்ட தரிப்பிடங்களை மட்டும் உபயோகிக்குமாறும் கேட்டுள்ளது.  

இதற்கிணங்க மருதானை பொலிஸ் பிரிவிலுள்ள ஆனந்தா கல்லூரி, ஆனந்தா மகளிர் கல்லூரி, கோதமி மகளிர் வித்தியாலயம், கிளிப்டன் மகளிர் வித்தியாலயம், மஹிந்த வித்தியாலயம் ஆகியவற்றிற்கு ஆனந்த மாவத்தை, மருதானையிலுள்ள வைட்பார்க் தரிப்பிடமும் மருதானை புனித சூசையப்பர் கல்லூரி, அசோகா வித்தியாலயம், மகாபோதி வித்தியாலயங்களுக்கு கொழும்பு – 10டீ. ஆர். விஜேவர்த்தன மாவத்தை தரிப்பிடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.  

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீமத் பாரோன் ஜயதிலக்க வித்தியாலயம், தாருஸ்ஸலாம் வித்தியாலயம், ராஜசிங்க வித்தியாலயம் ஆகியவற்றுக்காக மாளிகாவத்தை சத்தர்ம மாவத்தையிலுள்ள சதொச தரிப்பிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

டாம் வீதி பொலிஸ் பிரிவில் ஹுஸைனியா முஸ்லிம் மகா வித்தியாலயம், ஹுஸைனியா கனிஷ்ட வித்தியாலயங்களுக்கு சங்கராஜமாவத்தை,குமாரவாயில் மெல்வத்த விளையாட்டரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  கொம்பனிவீதி பொலிஸ் பிரிவில் பாதுகாப்பு படையினரின் பிள்ளைகளுக்கான வித்தியாலயத்திற்காக யூனியன் பிளேஸ் கொழும்பு 2ல் ஹைட்பார்க் மைதானம்,  

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவிலுள்ள இந்து வித்தியாலயம், அல்ஹிக்மா வித்தியாலயம், ஏ.ஆர். குணசிங்க வித்தியாலயம், அல்ஹக்கீம் வித்தியாலயம், சென்.செபஸ்தியன் முஸ்லிம் வித்தியாலயம், கணபதி இந்து வித்தியாலயம், சென் செபஸ்தியன் சிங்கள வித்தியாலயம், எம்.டி. குணசேன சர்வதேச பாடசாலை ஆகியவற்றுக்காக கொழும்பு 12சோண்டர்ஸ் பிளேஸிலுள்ள சோண்டர்ஸ் விளையாட்டு மைதானமும் ஒதுக்கப்பட்டுள்ளது.  

முகத்துவாரம் பொலிஸ் பிரிவில் சென்.ஜோன்ஸ் வித்தியாலயம், இந்து வித்தியாலயம், டிலாசால் வித்தியாலயங்களுக்காக கொழும்பு 15மட்டக்குளி விஸ்வைற் மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

தெமட்டகொடை பொலிஸ் பிரிவில், வேலுவன வித்தியாலயம், அல்ஹிஜ்ரா வித்தியாலயம், அநுருத்த மகளிர் வித்தியாலயம், சென். அந்தனீஸ் வித்தியாலயம், சென்.ஜோன்ஸ் வித்தியாலயம், சென். மத்தியூ வித்தியாலயம், விபுலானந்த தமிழ் மகாவித்தியாலயம், ஹேமமாலி மகளிர் வித்தியாலயம், அல்ஹைரியா வித்தியாலயங்க ளுக்கென தெமட்டகொடை பொலிஸுக்கு முன்பாகவுள்ள தரிப்பிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம், கொட்டாஞ்சேனை இந்து ஆண்கள் வித்தியாலயம், கொட்டாஞ்சேனை ஆரம்ப பாடசாலை, பாத்திமா முஸ்லிம் பாலிகா வித்தியாலயம், ஹமீட்அல் ஹுஸைனியா வித்தியாலயம், குட்செபர்ட் மகளிர் வித்தியாலயம், சென். பெனடிக் கல்லூரி, கொட்டாஞ்சேனை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், கெதீட்றல் ஆண்கள் வித்தியாலயம், சென் லூசியா வித்தியாலயம், கொட்டாஞ்சேனை குமார வித்தியாலயம், ஜனாதிபதி வித்தியாலயம் ஆகியவற்றுக்காக சங்கராஜ மாவத்தையிலுள்ள மெல்வத்த விளையாட்டு மைதானமும், சுகததாச விளையாட்டரங்கின் பின்பகுதியிலுள்ள மெட்-பாக் தரிப்பிடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.  

கிருலப்பனை பொலிஸ் பிரிவில், மஹாமான்ய வித்தியாலயம், சத்தர்மோதய வித்தியாலயம், குமார உதயம் வித்தியாலயம், இல்மா சர்வதேச பாடசாலை, எலிசபெத் சர்வதேச பாடசாலை, ஏசியன் சர்வதேச பாடசாலை, பொன்ட் சர்வதேச பாடசாலை ஆகியவற்றுக்காக கிருலப்பனை ஹைலெவல் வீதியிலுள்ள லலித் அத்துலத்முதலி விளையாட்டு மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

நாரஹேன்பிட்டி பொலிஸ்பிரிவில், இசிபத்தான கல்லூரி, சுஜாதா வித்தியாலயம், பராக்கிரம வித்தியாலயம், டட்லிசேனநாயக்க கல்லூரி, வித்யாதிலக்க வித்தியாலயம், றோயல் இன்ஸ்ரியூட், ஏசியன் சர்வதேச பாடசாலை ஆகியவற்றின் வாகனங்களை,  நாரஹேன்பிட்டி பார்க் வீதியிலுள்ள சாலிகா விளையாட்டு மைதானத்தில் நிறுத்த முடியும்.

பொரளை பொலிஸ் பிரிவில், தேவிபாலிகா வித்தியாலயம், ரத்னாவலி வித்தியாலயம், நாலந்தா வித்தியாலயம், வெஸ்லி கல்லூரி, சங்காமித்தா வித்தியாலயம், பிஸப் கல்லூரி, கன்னங்கர வித்தியாலயங்களின் வாகனங்களை பொரளை பெஸ்ரியன் வீதியிலுள்ள கெம்பல் விளையாட்டு மைதானத்தில்நிறுத்த முடியும்.

கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவில்,தேர்ஸ்டன் கல்லூரி (இலங்கை மன்ற கல்லூரி அருகில் கொழும்பு 7) றோயல் கல்லூரிகளுக்கு (கொழும்பு 7 ) மேட்லன்ட் பிளேஸ் தர்மபால மாவத்தை, ஆனந்த குமாரசாமி மாவத்தை எவ்.ஆர் சேனநாயக்க மாவத்தை ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. டி.எஸ். சேனநாயக்க கல்லூரிக்கு (கொழும்பு 7லயனல் வென்ட் மார்க்கஸ் பெர்னாண்டோ மாவத்தை நந்ததாஸ கோதாகொட மாவத்தை ஆகிய இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன). மியூசியஸ் கல்லூரி (கொழும்பு 3பெரஹர மாவத்தை ஸ்டான்லி ஜேன்ஸ் விளையாட்டு மைதானம்), ஸ்ரீமாவோ மகளிர் வித்தியாலயம் என்பவற்றுக்கு (கொழும்பு 7றோயல் கட்டடத்துக்கு முன்னால் உள்ள இலங்கை மன்றக் கல்லூரி வீதியும் யசோதரா மகளிர் வித்தியாலயம் (கொழும்பு 7கிறேகரி வீதி), சென்.பிரிட்ஜட் நல்லாயன்மடம் கல்லூரிகளுக்கு (கொழும்பு 7சி.ஆர். அன்ட் எவ்.சி. விளையாட்டு மைதானம் மலலசேகர மாவத்தை), ஹேரி கல்லூரி (கொழும்பு 7கின்ஸி பிளேஸ்), கொழும்பு சர்வதேச பாடசாலை, விபர்லி சர்வதேச பாடசாலை, ஸ்ரபெட் சர்வதேச பாடசாலைகளுக்கு (கொழும்பு 7றீட் மாவத்தை விளையாட்டு மைதானம்).ஒதுக்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவில், சென்.மேரிஸ் மகளிர் கல்லூரி, தென்தோமஸ் ஆண்கள் கல்லூரி, சிஎம்எஸ் மகளிர் வித்தியாலயம், பிஷப் மகளிர் கல்லூரி, மெதடிஸ் மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றுக்காக கடற்கரை வீதி கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து பம்பலப்பிட்டி புகையிரத நிலையம் வரையான இடம் ஒதுக்கப் பட்டுள்ளது. அதேவேளை கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிலுள்ள மஹாநாம கல்லூரி, சென். அந்தனீஸ் வித்தியாலயம், சென்.மைக்கல் ஆண்கள் வித்தியாலயம், அல்அமீன் வித்தியாலயம், சீவலி சர்வதேச பாடசாலை, மெதடிஸ் தமிழ் வித்தியாலயம், லின்சே மகளிர் வித்தியாலயம் ஆகியவற்றுக்காக கொழும்பு 3பெரஹர மாவத்தையிலுள்ள ஸ்ரான்லி ஜேன்ஸ் விளையாட்டு மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவில் முஸ்லிம் மகளிர் கல்லூரி, இந்து ஆண்கள் கல்லூரி, இந்து பெண்கள் கல்லூரி, சென். பீற்றர்ஸ் கல்லூரி. லும்பினி வித்தியாலயம் ஆகியவற்றுக்காக பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திலிருந்து வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையான வீதி தரிப்பிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவிலுள்ள விசாகா வித்தியாலயத்திற்கு (கொழும்பு 4ஹைலெவல் வீதி டி.ஆர்.சி. மைதானம்), சென்.போல்ஸ் மகளிர் கல்லூரி, ஹொலிபமிலி கொன்வென்ற் என்பவற்றுக்கு (கொழும்பு 6லோறன்ஸ் வீதி குரே மைதானம்), சென்.மேரிஸ் தமிழ் வித்தியாலயம், புர்கான் முஸ்லிம் வித்தியாலயம், மெல்றியா தேசிய பாடசாலை, ஐ.சி.பி.ரி. தனியார் வித்தியாலயங்களுக்கு  ஈசொப்ற் நிறுவனம் கொழும்பு 4ஹைலெவல் வீதியும் ஹென்றி பேதிரிக் மைதானமும் ஒதுக்கப்பட்டுள்ளது.  

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில், சென் கிளேயர் வித்தியாலயம், சென். லோறன்ஸ் வித்தியாலயம் ஆகியவற்றுக்காக வெள்ளவத்தை ரயில் நிலையத்திலிருந்து இராமகிருஷ்ண சந்திவரையான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.  

இந்து மகளிர் கல்லூரி, லும்பினி வித்தியாலயம் ஆகியவற்றுக்காக கொழும்பு 6 லோறன்ஸ் வீதி குரே மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tue, 05/07/2019 - 08:23


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை