நவீன தொழில்நுட்பத்தை கல்விமான்இ புத்திஜீவிகளை உருவாக்க பயன்படுத்துங்கள்

நவீன தொழில்நுட்பத்தின் அனுகூலங்களை அறிவில் சிறந்த கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் கொண்ட உலகினை உருவாக்குவதற்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

நவீன தொழில்நுட்பம் மனித சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவேயன்றி அதனை மனித சமுதாயத்தின் அழிவுக்காக பயன்படுத்தக்கூடாது என்று நேற்று (12) பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வின்போது ஜனாதிபதி வலியுறுத்தினார். “எழுச்சிபெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் மொபிடல் நிறுவனங்கள் இணைந்து 2,500 மில்லியன் ரூபா செலவில் செயற்படுத்தப்பட்ட பல்வேறு வேலைத்திட்டங்களை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார்.

இதன்போது பொலன்னறுவை நகரை இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் நகரமாக அவர் பிரகடனப்படுத்தினார்.

பொலன்னறுவை தீப பூங்காவில் அமைக்கப்பட்ட 5G தொடர்பாடல் கோபுரம் மற்றும் ஹபரண - பொலன்னறுவை வீதியில் தற்போதுள்ள தொடர்பாடல் குறைபாடுகளை சரி செய்வதற்கான தொடர்பாடல் கோபுரத்தையும் திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து மத்திய கலாசார நிதியத்தினூடாக பொலன்னறுவை நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக கட்டிட தொகுதியையும் திறந்து வைத்தார்.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிட தொகுதியை திறந்து வைத்த ஜனாதிபதி அதனை பார்வையிட்டதுடன், கடை உரிமையாளர்களுக்கு கடைகளை கையளிக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை