நோன்பை முன்னிட்டு பேரீச்சம்பழங்கள் விநியோகம்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு நோன்பு திறப்பதற்கான பேரீச்சம்பழங்களை விநியோகம் செய்யும் நிகழ்வு கண்டி மாவட்டத்தில் நேற்று அமைச்சர் ஹலீம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் முதற்கட்டமாக கண்டி மாவட்ட பள்ளிவாசல்களுக்கு பேரீச்சம்பழங்களை வழங்கி வைத்தார்.

பேரிச்சம் பழங்கள் வழங்கும் நிகழ்வு கண்டி கட்டுக்கலே ஜும்மா பள்ளிவாலில் நடைபெற்றது. கண்டி மாநகர பிரதி முதல்வர் இலாஹி ஆப்தீன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள், கண்டி பள்ளிவாயல் ஒன்றியத் தலைவர் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்

இலங்கை முஸ்லிம்களுக்காக சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற நாடுகளிலிருந்து வருடம் தோறும் ஒரு தொகை பேரிச்சம் பழங்கள் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன.இம்முறை 250 தொன் பேரீச்சம்பழங்கள் இலங்கைக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 எம்.ஏ.அமீனுல்லா

Mon, 05/13/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை