புர்கினா பாசோ தேவாலய தாக்குதலில் அறுவர் பலி

ஆபிரிக்க நாடான புர்கினா பாசோவின் வடக்குப்பகுதியில் டாப்லோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் அந்த தேவாலயத்தின் பாதிரியாரும் அடக்கம். தாக்குதல் நடந்தபோது வழிபாடு நடந்துகொண்டிருந்தது.

உள்ளுர் நேரப்படி ஞாயிறு காலை 9 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது.

20 முதல் 30 வரையிலான எண்ணிக்கையில் இருந்த தாக்குதல்தாரிகள் தேவாலயத்துக்கு தீ வைத்தனர்.

பிற கட்டடங்களுக்குத் தீ வைக்கப்பட்டு, ஒரு மருத்துவ மையமும் சூறையாடப்பட்டதாக அந்த நகரின் மேயர் ஊஸ்மன் ஜோங்கோ தெரிவித்துள்ளார்.

2016 முதல் ஜிஹாதிய வன்முறை அதிகம் நடந்துவரும் புர்கினோ பாசோவில், கடந்த ஐந்து வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்படும் மூன்றாவது தாக்குதல் இதுவாகும்.

அல் கொய்தா, இஸ்லாமிய அரசு அமைப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள் மற்றும் உள்ளுரின் அன்சருள் இஸ்லாம் அமைப்பின் ஆயுதப் போராளிகள் இங்கு செயல்பட்டு வருகின்றனர்.

Tue, 05/14/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை