அமெரிக்காவில் சூறாவளி தாக்கி பலத்த சேதம்

அமெரிக்காவின் கன்சாஸ் மாகாணத்தில், அடுத்தடுத்து சூறாவளிக்காற்று வீசியதில் வீடுகள் பலத்த சேதமடைந்தன.

கன்சாஸ் மாகாணத்தில் உள்ள நகரங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை கனமழையுடன் சூறாவளி வீசியது. இதில் வீடுகள் தரைமட்டமானதோடு, மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதில் உயிர்ச்சேதம் எதுவுமில்லை என தெரிவித்துள்ள தேசிய வானிலை சேவை மையம், சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக ஒக்லஹாமா மாகாணத்தில் வீசிய சூறாவளியில், ஒஹையோவின் மேற்கு பகுதியில் உள்ள வீடுகள் பலத்த சேதமடைந்ததோடு, ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 05/30/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை