யெமன் தலைநகரில் சவூதி கூட்டணி வான் தாக்குதல்

சவூதி அரேபியாவின் எண்ணெய் நிலைகள் மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக ஹூத்தி கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் உள்ள யெமன் தலைநகர் சனா மீது சவூதி தலைமையிலான கூட்டணி வான் தாக்குதல் நடத்தியுள்ளது.

சனாவில் உள்ள ஒன்பது இராணுவத் தளங்கள் மீது வான் தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த நகர குடியிருப்பாளர்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் வீடுகள் சேதமாகி இருப்பதோடு இடிந்த வீடொன்றில் இருந்து சடலம் ஒன்று வெளியே எடுக்கப்பட்டதாக பார்த்தவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஹுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவான மிஸ்ரா தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் ஆறு வான் தாக்குதல்களில் ஆறு பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது.

எனினும் இராணுவத் தளங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகளை இலக்கு வைத்தே தாக்குதல் நடத்தியதாக சவூதி கூட்டணி குறிப்பிட்டுள்ளது.

சவூதியின் இரண்டு எண்ணெய் நிரப்பு நிலையங்கள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி கடந்த செவ்வாய்க்கிழமை குறிப்பிட்டது. இந்த தாக்குதலுக்கு ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர்.

Fri, 05/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை