அவசரகாலச் சட்டத்தை நீடிக்க கூட்டமைப்பு ஆதரவு வழங்காது

ஞானசார தேரரை விடுவிக்க முடியுமாயின் தமிழ் இளைஞர்கள் விடுவிக்க ஏன் முடியாது?

தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனாதிராஜா பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார். அவரசாகலச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்ட பல விடயங்களை இணைத்து அதனை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் ஜனாதிபதி சர்வகட்சிகளுடனும் கலந்துரையாடியிருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாதம் ஒழிக்கப்படுவதற்கு நாம் எதிர்க்கவில்லை. எனினும், தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பற்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுவதற்கு ஆதரவு வழங்க முடியாது என்றும் கூறினார்.

அவரசகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மாவை சேனாதிராஜா எம்.பி இதனைத் தெரிவித்தார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். தாக்குதல்கள் தென்னிலங்கையிலேயே அதிகம் இடம்பெற்றுள்ளன. எனினும், அவசரகாலச் சட்டத்தின் கீழ் வடக்கிலேயே பாதுகாப்புக் கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. பாடசாலைகளுக்கு முன்னால் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு நாளாந்தம் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இன்றிலிருந்தாவது பாடசாலை மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மகேஸ்வரன் பிரசாத

Sat, 05/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை