இன மத பேதமின்றிய அபிவிருத்தியே காலத்தின் தேவை

இன மத பேதமின்றிய அபிவிருத்தியே காலத்தின் தேவை-Seruwila UNP Organizer Sandith Samarasinghe Speech

ஐ.தே.க. எம்.பி. யும் சேருவில தொகுதி அமைப்பாளருமான சந்தித் சமரசிங்க

இன மத வேறுபாடின்றி அனைவருக்கும் அபிவிருத்தியை முன்னெடுப்பதே காலத்தின் தேவையாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சேருவில தொகுதி அமைப்பாளருமான சந்தித் சமரசிங்க தெரிவித்தார்.

திருகோணமலை-மொரவெவ  பிரதேச சபைக்குட்பட்ட ரொட்டவெவ கிராமத்தில் இன்று (12)  மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

இன மத பேதமின்றிய அபிவிருத்தியே காலத்தின் தேவை-Seruwila UNP Organizer Sandith Samarasinghe Speech

சேருவில தொகுதியிலுள்ள கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக வேண்டி கம்பெரலிய  வேலைத்திட்டத்தின் கீழ் 300 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் அதில் 150 இலட்சம் ரூபாவினை மொரவெவ பிரதேசத்துக்கு மாத்திரம் ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் இப்பிரதேசத்தில் மட்டுமல்லாது சேருவில தொகுதியில் அனைத்து மக்களுக்கும் இன மத வேறுபாடின்றி அபிவிருத்திகளை முன்னெடுத்து வருவதாகவும், குறையாக காணப்படுகின்ற மேலதிக திட்டங்களை உங்களுடைய பிரதேச சபை உறுப்பினர் ஏ.எஸ்.எம். பைஸர் ஊடாக  கலந்துரையாடல்களை நடாத்தி கிராமத்தின் குறைபாடுகளை தனக்கு வழங்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க  மக்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மொரவெவ பிரதேச சபை உப தவிசாளர் சாலிய ரத்னாயக்க,ரொட்டவெவ பள்ளி வாசல் தலைவர் எம். அமான், மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல் சலாம் யாசீம்)

Sun, 05/12/2019 - 19:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை