உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலை கண்டித்து புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை கண்டித்தும், இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினை முற்றாக ஒழிக்க கோரியும் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று புத்தளத்தில் இன்று (17) இடம்பெற்றது.

ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

புத்தளம் நகர சபை, புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா, புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித், புத்தளம் இஸ்லாமிய அமைப்புகளின் சம்மேளனம், புத்தளம் வாலிபர் ஒன்றியம், புத்தளம் மாணவர் அமைப்பு என்பன கூட்டாக இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தன.

புத்தளம் முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜிதுக்கு முன்பாக ஒன்றுகூடி பேரணியாக சென்ற  ஆர்ப்பாட்டக்கார்கள்,  கொழும்பு முகத்திடலை அடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்தோடு, அங்கு எதிர்ப்பு பொதுக்கூட்டமும் இடம்பெற்றது. 

புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ், புத்தளம் மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் பீ.எம்.அப்துல் ஜனாப் ஆகியோரால் கையொப்பமிடப்பட்ட ஆறு அம்சங்களை உள்ளடக்கிய பயங்கரவாதத்துக்கு எதிரான புத்தளம் முஸ்லிம் மக்களின் பிரகடனமும் இங்கு வெளியிடப்பட்டது.  

 (முகம்மட் சனூன்-    புத்தளம் தினகரன் நிருபர்)

Fri, 05/17/2019 - 16:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை