வடகொரியா மீது டிரம்ப் தொடர்ந்தும் நம்பிக்கை

வட கொரியாவின் அண்மைய ஏவுணை சோதனைகள் பற்றி கவலை இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். தனது சொந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கருத்துக்கே இது முரணாக அமைந்துள்ளது.

நேற்றுக் காலை ஜப்பானை அடைந்த டிரம்ப் இந்த ஏவுகணைகள் “சிறு ஆயுதங்கள்” என்று ட்விட்டர் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, டிரம்ப் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், சிறிய ரக ஆயுதங்களை வட கொரியா பரிசோதனை செய்துள்ளது. இதனால் என்னுடைய நிர்வாகத்தில் உள்ள சிலர் மற்றும் வேறு சிலருக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

ஆனால் எனக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. கிம் எனக்கு அளித்த வாக்குறுதியை காத்திடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என பதிவிட்டுள்ளார்.

எனினும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் இந்த ஏவுகணைச் சோதனை மூலம் வட கொரியா ஐ.நா தீர்மானத்தை மீறி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தனது ஜப்பான் விஜயத்தை ஆரம்பித்து அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே உடன் நேற்று டிரம்ப் கொல்ப் விளையாடினார். இரு தலைவர்களும் ஒன்றாக காலை உணவை உட்கொண்ட பின்னரே தலைநகர் டோக்கியோவுக்கு வெளியே சிபாவில் உள்ள கொல்ப் மௌத்தினத்திற்கு இருவரும் சென்றனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் சமநிலையற்ற தன்மை தெடார்பில் தீர்வு காண்பதற்கு ஜப்பானுடன் உடன்பாடு ஒன்றுக்கு வர விரும்புவதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இடையிலான சந்திப்பில், வட கொரிய விவகாரம், வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் ஈரான் விவகாரம் ஆகியவை விவாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.

Mon, 05/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை