வரைபடத்தில் சோமாலியாவை இணைத்த எத்தியோப்பியா

தாங்கள் தயாரித்த வரைபடத்தில் அண்டை நாடான சோமாலியாவை தங்கள் நாட்டோடு சேர்த்து கொண்டதற்காக எத்தியோப்பிய வெளியுறவுத் துறை அமைச்சகம் மன்னிப்புக் கேட்டுள்ளது. “இதன் காரணமாக ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் தவறான புரிதலுக்காக வருந்துகிறோம்” என்று எத்தியோப்பியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வரைப்படத்தில், சோமாலியா இல்லாத அதே நேரம், சுதந்திர நாடாக அறிவித்து கொண்ட ஆனால் உலகம் அங்கீகரிக்காத சோமாலிலாண்ட் இருந்தது.

சோமாலியா மற்றும் எத்தியோப்பியா இரு நாடுகளும் நீண்ட காலமாக எதிரி நாடுகளாக இருந்ததோடு, கடந்ந காலங்களில் எல்லை மோதல்களிலும் ஈடுபட்டுள்ளன. எனினும் எத்தியோப்பிய பிரதமராக அபி அஹமட் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடக்கம் இரு நாடுகளின் உறவுகள் முன்னேற்றம் அடைந்துள்ளது.

இந்த வரைபடம் சமூக தளத்தில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, எத்தியோப்பியா தனது நாட்டை கைப்பற்றும் திட்டம் அப்பலத்திற்கு வந்திருப்பதாக சோமலியர்கள் குற்றம்சாட்டினர்.

Wed, 05/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை